மூர்த்தியாஞ் சுந்தரனார் மனதுவந்து முத்தத்தில் நின்றதொரு மாந்தர்தம்மை பார்த்துமே அழுகையென்ற சத்தமென்ன பாங்கான சோழவர்க்கஞ் சொல்லுமென்ன தீர்த்திடுவேன் உந்தனது வபவாதத்தை திகழாகச் செப்புமென்றார் மூர்த்தியாகும் ஆர்த்துமே சோழவர்க்க மாண்பரெல்லாம் வன்பாகத் தலைவணங்கி சொல்லிட்டாரே |