வணங்கியே யடிவார சமாதிதன்னில் வண்மையுடன் போகரிஷிமுனிவர்தானும் இணங்கியே கரங்குவித்து நிற்கும்போது எழிலான சமாதியது திறந்துதங்கே மணமுடைய சொரூபமென்ற சித்துதாமும் மகத்தான ரிஷியாருங் கண்திறந்து சுணங்கமது வாராமல் போகர்தம்மை சுத்தமுடன் வாடீநுதிறந்து கேட்டிட்டாரே |