விடையான விடையதுவும் பெற்றுக்கொண்டு வீறான குளிகையது பூண்டுகொண்டு தடையறவே கிக்கிந்தா மலையினுச்சி தண்மையுடன் வடக்குபுறம் மேற்குவாசல் சடைபோன்ற போகரிஷிநாதர்தானும் சட்டமுடன் சிவலிங்கந் தன்னைக்கண்டு நடையுடனே மேற்பதியில் செல்லும்போது நலமான பொன்மயிலை கண்டிட்டாரே |