கண்டாரே பொன்மயிலை போகர்தானும் கனமுடனே எதிர்நின்று முடிகள்சாடீநுத்து தெண்டமுடன் பதாம்புயத்தைத்தான்வணங்கி தேற்றமுடன் கூறலுற்றார் ரிஷியார்தாமும் பண்டதுபோல் தங்கமென்ற மயில்தானப்பா பாண்டவனே போகரிஷிதன்னைப்பார்த்து ஒண்டியுடன் மலைமேலே வந்தபாலா வுத்தமனே யாரென்று கேட்கலாச்சே |