சொன்னாரே காலாங்கி நாதர்தானும் சொர்ப்பமுள்ள ரிஷியார்க்கு சாபந்தீர்க்க மன்னவனே மனோன்மணியாள் அறிந்தசித்து மகத்தான காலாங்கிநாதரப்பா முன்னேதான் மூன்றுயுகங் கண்டசித்து மூதுலகோர் தானறியா மாயசித்து நன்மையாடீநு வையகத்தை மறந்தசித்து நாதாந்த சொரூபமென்ற சித்துதாமே |