நின்றதொரு போகர்முனி தன்னைப்பார்த்து நிட்களங்கமானதொரு சீஷவர்க்கம் குன்றின்மேல் தாமிருந்தார் யுகாந்தபேர்கள் கொற்றவனே வரைகோடி திகடிநகோடிதானும் சென்றுமே காலாங்கிநாதசீஷர் சிறப்புடனே போகர்முனி பதாம்புயத்தை நன்றுடனே வஞ்சலிகள் மிகவுங்கூறி நாதாந்த போகர்தனைக் கண்டார்தானே |