விடையென்று சொல்லுகையில் முதலைதானும் விருப்பமுடன் நவகண்டரிஷியார்தம்மை தயையறவே விழுங்கியதோர் பாலன்தன்னை தட்சணமே போகர்முன்னே கக்கலாச்சு நடையுடனே நவகண்ட ரிஷியார்தாமும் நாதாந்த பாலகனும் வெளியிலேறி சமைபோன்ற போகருட பதாம்புயத்தை சட்டமுடன் தான்வணங்கி பணிந்திட்டாரே |