வழியென்று கேட்கையிலே சித்தர்தானும் வண்மையுடன் தானுரைப்பார் போகருக்கு பழியான ரேணுகையைக் காணுதற்கு பாருலகில் யாராலும் முடியாதப்பா குழியான சமாதியிட கோட்டைதன்னில் கொற்றவனே செல்வதற்கு இடமுமில்லை வழிகாணவேண்டுமென்றால் சொல்வோம்யாமும் வண்மையுடன் கண்டல்லோதெரிசிப்பீரே |