கண்டேனே ரேணுகைபோல் மாயாசித்து காசினியில் எங்கேனுங் கண்டதில்லை அண்டர்முனி ராட்சதர்கள் அனேகங்கண்டேன் அகிலமதில் வெகுகோடி சித்துகண்டேன் புண்டரீகமானதொரு கிருஷ்ணாவதாரன் பூவுலகில் அதிசயங்கள் சொல்லொண்ணாது தண்டவள ரிஷிகளெல்லா மனேகசித்து தாரணியில் செடீநுதவருங் கோடிபேரே |