| அஞ்சுமே செந்தூரம் பணந்தானொன்று அனுபானம் தேனோடே மண்டலமேகொள்ளு கெஞ்சுமே நோடீநுகளெல்லாம் தவிடுபொடியாகும் கொடியான காயசித்தி அருணன்போலாம் துஞ்சுமே நரைதிரையெல்லாம் மாறும் சகமான சட்டையொன்று கக்கிப்போகும் வஞ்சுமே கற்பாந்தகோடிகாலம் வாசியை ஐந்துதலத்தில் இருத்திப்பாரே |