வில்லான வில்லதுவும் விளம்பப்போமோ மேதினியில் வச்சிரமாம் வில்தானப்பா கல்போன்ற மலைதனையும் எறியும்வில்லு காவலனார் காட்டகத்தே யிருக்கும்வில்லு மல்போன்ற சமர்க்களத்தைக் கொல்லும்வில்லு மகத்தான பாஞ்சாலன் ஆணிவில்லு வல்லதொரு வில்லதனைக் கண்டேன்யானும் வளமான சித்தாதிக் காவலுண்டே |