ஓதவே யடியேனும் களைகள்நீங்கி வுந்தனது வுபதேசம் பெறவேயெண்ணி தீதமுடன் வில்லினது வருகிற்சென்றேன் நிட்களங்கமாகவல்லோ கரங்குவித்தேன் பாதமது தன்னளவாம் சிரங்குவித்து பட்சமுடன் அடிவணங்கி தெண்டனிட்டு ஆதமுடன் வணங்கியல்லோ நிற்கும்போது அங்ஙணவே யசரீரி வாக்குண்டாச்சே |