| வில்லான பாஞ்சாலன் நாணுவில்லு வெகுகோடி ராஜர்களும் மெச்சும்வில்லு வல்லதொரு லோகாதிசித்தரெல்லாம் மகத்தான ரிஷிகள்முதல் வணங்கும்வில்லு நில்லாது படைமுகத்தில் வரசர்தம்மை நீணிலத்தில் வெல்லுகின்ற யிந்திரவில்லு சல்லாப முடையதொரு வில்லுமாகும் சதுரான வையகத்தில் சமாதிவில்லே |