தந்தாரே போகரிஷிநாதருக்கு சாங்கமுடன் காலாங்கிநாதர்தாமும் விந்தையுடன் விடையதுவும் பெற்றுக்கொண்டு வேதாந்த போகரிஷி என்றேனே யடியேனும் மனதுவந்து எழிலாகக் குளிகையது பூண்டுகொண்டு சென்றேனே சீனபதி தேசந்தன்னில் சிறப்புடனே வதிசயங்களெல்லாஞ் சொன்னேன் குன்றான நாகமலைத் தன்னைக்காண கொற்றவனே மனதுவந்து குளிகைபூண்டு சென்றேனே வாகாஷந்தான்பறந்து செம்மலுடன் வுச்சிமுகங் கண்டிட்டேனே |