ஒண்ணாது பட்சியது யானுங்கண்டேன் வுத்தமனே பட்சியெனைக் கண்டபோது அண்ணாந்து அடியேனும் மனதுவந்து அன்புடனே காலாங்கி சீஷனென்றேன் கண்ணான காலாங்கி சீஷனென்று கைதொழுது முடிவணங்கி தெண்டனிட்டேன் மண்ணதனில் சுனைகீழே இருக்குஞ்சமாதி மார்க்கமுடன் எந்தனுக்குக் கூறலாச்சே |