வணங்கியே சமாதிபுரம் நிற்கும்போது வாகான சமாதியது வெடிக்கலாச்சு இணங்கவே நவகோடி ரிஷிகள்தாமும் எழிலான சமாதியிடம் பக்கல்நின்றார் கணமுடனே கழுக்குன்றி சித்துதாமும் கருவாக எந்தனையும் கண்டபோது மணங்கமழும் சித்துமுனி தேவர்தாமும் மார்க்கமுடன் எந்தனை யாரென்றிட்டாரே |