சென்றுமே யடியேனும் கொண்டுவந்து சிறப்புடனே சமாதிமுகம் நில்லென்றார் குன்றுமேல் தானிருந்த சீஷர்தானும் கோலமுடன் எந்தனையும் கண்டபோது அன்றுதித்த மான்தோலும் புலித்தோலப்பா வப்பனே எந்தனுக்குத் தான்கொடுத்து இன்றுமுதல் சிலகால மிங்கிருந்தால் எழிலான உபதேசங் கிடைக்கும்பாரே |