தந்தாரே வரமதுவுந்தான்கொடுத்து தகமையுடன் காயாதிகற்பந்தந்து சிந்தனையுமொன்றாக்கி எந்தனுக்கு சீர்பெறவே நாலுயுகமிருக்கவென்று சொந்தமுடன் எந்தனுக்கு ஞானமோதி சுடரொளியாந் தோற்றமதை முன்னுண்டாக்கி விந்தைகளு மிகக்கூறி யெந்தனுக்கு விண்ணுலகில் இருக்கவென்று மதிசொன்னாரே |