| தானென்ற சவ்வீரப்பொடிதான் சேரை சமர்த்தான கல்லுப்பு ஒன்றுக்கு முக்கால் மானென்ற சவ்வீரம் பொடியாக்குப்பாதி மகத்தான மூரில்யென்ற பலந்தானப்பா தானென்ற துரிசுக்குப்பாதிப் பூநீரு கனமான நீருக்குச் சீனம் முக்கால் வேனென்ற வெடியுப்பும் அப்படியேயாகும் வெடியுப்பு மூன்றிலொன்று சாரஞ்செடீநுயே |