கண்டேனே யண்டர்முனி சித்துதம்மை கைலாசநாதரென்று வடிபணிந்து தெண்டமுடன் முடிவணங்கி நமஸ்கரித்து தேற்றமுடன் என்குருவே என்றுசொல்லி கொண்டுகரங் குவித்தல்லோ தாள்பணிந்து கொற்றவனே பாதுகாக்க வென்றுகூறி விண்டிடவே நமஸ்கரித்து பாதந்தொட்டு விருப்பமுடன் பணிந்திட்டேன் உண்மைதானே |