| இட்டதொரு போகரிஷியென்றுசொல்லி எழிலாகத் தாமுரைத்தேன் போகர்யானும் அட்டகிரி தனில்வாழும் வெள்ளையானை வன்புடனே மனதுவந்து மனங்களித்து சட்டமுடன் எந்தனையும் தலைமேற்கொண்டு தண்மையுள்ள எட்டாங்கால் தறையிற்சென்று திட்டமுடன் தேவேந்திரன் சமாதிபக்கல் தீர்க்கமுடன் கொண்டல்லோ விடுகலாச்சே |