தானான தேவேந்திர பகவான்தானும் தரணிபதி யாண்டிருக்கும் காலந்தன்னில் கோனான பரமசிவன் கடாட்சத்தாலே கொற்றவர்க்கு ஞானமது மிகவுண்டாகி தேனான மனோன்மணியாள் தரிசனத்தை செம்மலுடன் தேவேந்திரன் தானுங்கண்டு மானான வையகத்தின் வாடிநக்கைதன்னை மகதேவர் தன்மனதில் நினைத்திட்டாரே |