கேட்டவுடன் அடியேனும் மனதுவந்து கெவனமுடன் காயாதிகற்பந்தன்னை தாட்டிகமாயுண்டுமல்லோ மகிமைபூண்டு தாரணியில் மேல்வரைசெல்லுதற்கு வாட்டமுடன் எந்தனுக்கு நேத்திரங்கள் வளமுடனே ஜோதிமின்னல் கண்டாற்போல நீட்டமுடன் பிரகாச வொளியுண்டாச்சு நீதியுடன் பதினோராங்கால் சென்றேனே |