தானான குளிகையது கொண்டுமல்லோ தண்மையுடன் அடியேனும் அருளும்பெற்று கோனான குருபதத்தை மனதிலுன்னி கொற்றவனே யடியேனுங் கொண்டுமல்லோ தேனான மனோன்மணியை தெரிசித்தேதான் தேற்றமுடன் பனிரெண்டாம் வரையிற் சென்றேன் மானான குளிகைவிட்டு யானுமல்லோ மகத்தான கிரிதனிலே இறங்கினேனே |