தானான குளிகைகொண்டு காலாங்கிநாதர் தண்மையுடன் குருதனையே நினைந்து கொண்டு தேனான பதிமூன்றாம் வரையிற் சென்றேன் தோற்றமுடன் விநாயகரின் சமாதிகாண கோனான தும்பிக்கை யுடைய மாண்பன் கொற்றவனாங் கணபதியாமென்ற சித்து மானான மகதேவரென்னுஞ்சித்து மகத்தான சமாதிபதி கண்டிட்டேனே |