சித்தான சித்துமுனி விநாயகன்தான் சிறப்பான மேருகிரி தன்னிலப்பா முத்தான பதிமூன்றாம் வரையில்தானும் முனையான குளிகையினால் கண்டுவந்தேன் பத்திதரும் நெடுங்கால மிருந்தசித்து பாருலகில் சாத்திரத்தின் முதலாஞ்சித்து வெத்திபெறும் விநாயகரின் சித்துதம்மை வேகமுடன் மேருவரை பார்திட்டேனே |