| கோடானகோடியும் நாலுயுகமப்பா குவலயத்தில் மனோன்மணியைக் கண்டதில்லை நாடாண்மைதனில் வாழும் ரிஷிகள்தேவர் நலமான சித்துமுனி நாதர்தாமும் காடாண்மை கொண்டதொரு மனோன்மணியாள்ரூபம் தாரணியில் யாவருந்தான் கண்டதில்லை பாடாண்மை கொண்டதொரு ஜோதிமயந்தன்னை பாருலகில் கண்டவர்கள் கோடிபேரே |