பேரான திருக்கமலம் வீற்றிருக்கும் பெருமையுள்ள மனோன்மணியாள் பீடந்தன்னை கீரான சித்துமுனி நாதர்தாமும் சிறப்புடனே பாடிவைத்தார் பலநூல்தன்னில் நேரான சாத்திரத்தின் வுளவுகண்டோர் நேர்மையுடன் சின்மயத்தை மனதிலுன்னி ஆரான பீடமென்ற ஆராதாரம் வப்பனே யொடுங்கிநின்ற சமாதிதானே |