இருந்தேனே கானகத்தின் வழியில்தானும் எழிலான குகையோரம் தன்னில்நின்றேன் குருந்தமரந் தன்னருகே சித்துதாமும் கொப்பெனவே சீஷவர்க்கம் தன்னிற்சேர்ந்து பொருந்தவே நெடுங்காலந் தவமிருந்து பொங்கமுடன் சுனையோரம் சாரல்தன்னில் விருந்தமுர்தமான தொருபசளைதன்னை விருப்பமுடன் சித்துமுனியும் பார்த்தாரே |