நின்றேனே பதினேழாம் வரையிலப்பா நீதியுள்ள சித்துமுனி கோடாகோடி குன்றினிலே எந்தனையுங் கண்டுமல்லோ கொப்பெனவே யாரென்று வினவிக்கேட்க வென்றிடவே யடியேனும் பயந்தொடுங்கி விருப்பமுடன் பதாம்புயத்தை பணிந்துநின்று சென்றேனே மகாவிஷ்ணு சமாதிதன்னை சேர்வை யெனக்கருள்தருக வென்றேன்தானே |