அருளான விடையதுவும் பெற்றுமேதான் வன்பான குளிகையது யானும்பூண்டு இருளான மலைதனிலே யான்கடந்து எழிலான பதினெட்டாம் வரையிற் சென்றேன் மருளான மார்க்கண்டர் தன்னைக்காண மார்க்கமுடன் குளிகையது பூண்டுகொண்டு பொருளான மேருகிரி யடியன்தானும் பொங்கமுடன் பதினெட்டாம் வரைசென்றேனே |