கண்டேனே மேருகிரி தன்னிலப்பா கருவான வடபாகம் நூல்கள் சொல்வேன் விண்டதொரு நூலெல்லாம் வடமொழியேயாகும் வீரான சாத்திரங்கள் மலைபோல் கண்டேன் அண்டமுடன் மேருகிரி தன்னிலப்பா வழகான கிழக்குமுகம் நூல்கள் சொல்வேன் சண்டமாருதம்போல நூல்கள்தானும் சார்பாக கீர்வாணம் என்னலாமே |