என்னலாம் மேருகிரி தன்னிலப்பா எழிலான மேற்குமுகஞ் சமாதிகண்டேன் துன்னவே சாத்திரங்கள் மலைபோல் கண்டேன் துப்புரவடீநு படிப்பதற்கு நாளுமில்லை சொன்னதொரு பரிபாஷை நூல்களப்பா தோறாமல் மேருகிரி தன்னிற்சென்றேன் பன்னவே பலபேருங் கூடிசொன்ன பாரினிலே சாத்திரங்கள் அனேகந்தானே |