தானான சாத்திரங்கள் மேருதன்னில் தண்மையுடன் நாலுமுகஞ் சமாதிகண்டேன் கோனான குருநூலும் பெருநூலுமாக கொற்றவனே மலைபோலே சமாதிகண்டேன் பானான மூன்றுயுகப் பிரளயங்கள் பாங்குடனே வந்தநெடுங் காலந்தன்னில் தேனான சாத்திரத்தை மேருதன்னில் தேற்றமுடன் சமாதிதனில் வைத்திட்டாரே |