மூன்றான தேவர்முதல் கோடியப்பா முனையான ரம்பை ஊர்வசியாளோடும் சான்றதொரு நந்தீசர் முதலானோரும் சார்பான பிரிங்கிமகாரிஷியாரோடும் போன்றதொரு மார்க்கண்ட முனிவரோடும் புகழான குருந்தர் முதல் வசிட்டரோடும் சான்றதொரு நாரதமா முனிவரோடும் சார்பான பதிதனையே பார்த்திட்டேனே |