பார்த்தேனே யொருகோடி வெள்ளஞ்சேனை பாங்கான மேருகிரி தன்னிலப்பா தீர்த்தமுடன் கைலங்கிரி வாசர்தன்னை சிறப்புடனே கைலாயபதியிற் கண்டேன் சேர்த்ததொரு வெகுமாண்பர் கூட்டத்தோடும் ஜெகதலத்தில் புண்ணியர்கள் அனேகங்கண்டேன் நேர்த்தியுடன் பட்டதிசை தன்னிலப்பா நேர்மையுடன் அதிசயங்கள் மிகவுண்டாமே |