பார்த்தேனே மேருகிரி தன்னிலப்பா பாங்கான தங்கரதம்மேலிற்றானும் தீர்த்தமுடன் லிங்கமுடன் இந்திரன்தானும் சிறப்பான ஆயிரங்கண் தன்னோடொக்க ஊர்த்துவமா மாயிரத்தெட்டு மாற்றுக்குகந்த சிம்மாதனம் அதிலேஇந்திரன்சேர்வை கோர்த்துமே கோடான கோடிமன்னர் கொற்றவர்க்கு ஏவல்செடீநுய வறிந்திட்டேனே |