தானான போகரேழாயிரந்தான் தாரணியில் கண்டவர்கள் விள்ளார்தாமே கோனான எனதையர் காலாங்கிநாதர் குவலயத்தில் கொற்றவர்தன் கடாட்சத்தாலும் வேனான சத்தகாவியத்தையப்பா விருப்பமுடன் பாடிவைத்தேன் மைந்தாகேளு தேனான இந்நூல்தான் சொர்ணநூலாம் தெளிவாகப் பாடிவைத்தேன் புவியுளோர்க்கே |