தானாக பொருள்தீண்டா மாண்பரெல்லாம் சட்டமுடன் தேங்காயைத் தொடுவார்பாரு வேனான பொருளெடுத்தோன் சந்தேகத்தால் வேற்றமுகமாகியல்லோ தீண்டானப்பா மானான வையமென்ற யெண்ணத்தாலே மயக்கமுடன் தேவதைகள் கொல்லுமென்று பானான கிலேசமது வெகுவாடீநு தோன்றி பான்மையுடன் கைதனையே தீண்டான்பாரே |