நடத்துகையில் இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் ராஜாதிராஜரெல்லாம் மெச்சுதற்கு திடமான தந்திரமாஞ் ஜாலப்போக்கு செப்புகிறேன் மாணாக்கர் யுந்தமக்கு அடலான தந்திரமாம் மாயதந்திரம் அப்பனே யாருந்தான் அறியமாட்டார் கடலான கள்ளனைத்தான் பிடிக்கவல்லோ காசினியி லின்னமொரு மதிசொல்வேனே |