கேளப்பா யவரவர்கள் கையிலப்பா கெடியான பச்சரிசி நிரம்பவுந்தான் ஆளப்பா தனித்தனியே கொடுத்துமைந்தா வப்பனே யவர்களுக்கு வணக்கங்கூறி மாலப்பா மாண்பர்களே நீங்களெல்லாம் மயங்காமல் பொருளெடுக்கவில்லையென்று தேளப்பா கொட்டினது போலேயப்பா தேற்றமுடன் யான்கூறும் மொழியைக்கேளே |