பாரப்பா பரங்கியென்ற பாஷாணந்தான் பலமெடுத்து அயச்சட்டிக்குள்ளேவைத்து நேரப்பா துண்டிப்பாடீநு நாலுசாமம் நீத்தாதே சுருக்கிடனே மெழுகாடீநுப்போகும் தூரப்பா இரும்பு செம்பில் நூற்றுக்கொன்றி துடியான ரசிதமது பதினாறாகும் சீரப்பா சரக்கெல்லாம் கட்டிப்போகும் சிறுபிள்ளை ஆடும்இந்த வாதந்தானே |