தானான இன்னமொரு கருமானங்கேள் தன்மையுள்ள வாஞ்சநேயா பிடித்துவந்து கோனான குருதனையே நினைத்துக்கொண்டு கொற்றவனே சிற்றாமணக்கு வித்துதானும் தேனான வித்தையதை யெடுத்துக்கொண்டு தேற்றமுடன் ஆசனத்தின்வழியதாக மானான வயறுநிறை கொள்ளுமட்டும் மகத்தான கொட்டைதனை பொதிந்திடாயே |