உண்டான தேசமது இலங்கையப்பா வுத்தமனே வெகுகோடி காலமுன்னே கண்டேனே குளிகையது பூண்டுகொண்டு கண்கொள்ளாக் கோட்டையது யானுங் கண்டேன் அண்டர்முனி ராட்சதர்கள் இருக்குங்கோட்டை அரசனது ராவணனார்கோட்டையப்பா சண்டமாருதம்போலக் கோட்டையுண்டு சாங்கமுடன் கற்கோட்டைக் கூறொண்ணாதே |