தானான கோட்டையது வாசல்தன்னில் தார்வேந்தன் மன்னனது செங்கோல்தன்னில் தேனான மனோன்மணியாள் ரூபம்போல தேர்வேந்தர் சபைமுன்னே தோற்றலாச்சு மானான வசரீரி வாக்குதானும் மன்னவர்முன் தன்செவிக்குக் கேட்கலாச்சு கோனான வேந்தனுமே திடுக்கிட்டேங்கி கொற்றவனும் பயந்தல்லோ விழுந்திட்டாரே |