ஆச்சப்பா ஜாலமென்ற தந்திரவேதை வதரணங்கள் தன்னாலே எறியலாச்சு மூச்சொடுங்கிப் போயிருந்த பூரந்தானும் முனையான கொழுந்துவிட்டு எறியும்வண்ணம் பாச்சலுடன் மாண்பர்களுங் கண்டுமல்லோ பாங்குடனே யதுபுதுமைகாலமென்பார் ஆச்சரிய மானதொரு வித்தைதானும் அவனியிலே யாரறிவார் புத்திமானே |