போற்றியே யின்னமொரு கருமானங்கேள் புகழான காலாங்கிநாதர்தம்மால் தேற்றமுடன் எந்தனுக்கு உபதேசித்த தெளிவான ஜாலவித்தை மரக்காணந்தான் ஆற்றலுடன் மணத்தவளை நெடீநுயைவாங்கி வப்பனே வுடும்பினுட நெடீநுயுங்கூட்டி சாற்றலுடன் விலாங்கினது யிணமுஞ்சேர்த்து சட்டமுடன் குழித்தயிலம் வாங்கிடாயே |