பார்க்கையிலே சிரசதும் தோன்றாவிட்டால் பாலகனே ஒருதிங்கள் சாவான்பாரு தீர்க்கமுடன் இருகரமுங்காணாவிட்டால் தினமதுவும் மூன்றுதிங்கள் மறிப்பான்பாரு சேர்க்கவே மார்பதனில் துவாரங்கண்டு செங்கதிரோன் கண்ணிற்குத் தோற்றுமாகில் ஆற்றவே யறுதிங்கள் மரணமாவான் அப்பனே சாயாவின் புருஷன்தானே |