அன்றான தரிசனத்தைக் கண்டமாண்பர் வவனியிலே தானுமொரு சித்தனைப்போல் குன்றான மலைதனிலே இருக்கலாகும் குவலயத்தில் நீயுமொரு சித்தனைப்போல் வென்றிடவே தேவாதி ரிஷிகள்தம்மை விண்ணுலகில் காண்பதற்கு யிடமுண்டாகும் தென்திசையில் அகத்தியனார் முனிவர்தானும் செப்பினார் இந்தமுறை சொன்னார்பாரே |