கண்டுபார் விராகனிடை துரிசுசுன்னம் கனமான சதுரக்கள்ளி பாலில்போட்டு விண்டுபார் சாமம்தான் மூடிவைக்க விடுபட்ட சுத்தஜலம் போலேயாகும் கொண்டுபார் வெள்ளையென்ற பாஷானந்தான் கொடிதான அயச்சட்டிக்குள்ளே வைத்து மண்டுபார் நாற்சாமம் சுருக்குபோட மகத்தான வெள்ளையது மெழுகுமாமே |